வரலாற்றின் அதிசயம் என்றொரு சொல்வழக்கு இருக்கு மானால், அது முற்ற முழுக்கக் கார்ல் மார்க்ஸ§க்கே பொருந்தும். உலகின் தலைசிறந்த தத்துவம், தலைசிறந்த பொருளா-தாரம், தலைசிறந்த காதல், குடும்பம், என எண்ணற்ற தலைசிறந்தவற்றைத் தக்கவைத்துக்கொண்டு இருந்த அவரது வாழ்வு, தலைசிறந்த நட்புக்கும் அர்த்தம் எழுதியுள்ளது.
ஜென்னியைப் போலவே மார்க்ஸின் வாழ்க்கைக்குப் பெருமை கூட்டிய அந்த நண்பர் ப்ரெட்ரிக் ஏங்கல்ஸ்.
இருவரும் இருவேறு துருவங்கள் என்றாலும், இருவரும் ஒரு உடலின் அறிவும் இதயமும் போல பிரிக்க முடியாத சக்திகளாக இணைந்திருந்தனர். மார்க்ஸ், ஏங்கல்ஸின் கண்ணாக இருந்துள் ளார். ஏங்கல்ஸ் மார்க்ஸின் கைகளாகச் செயல்பட்டு இருக்கிறார்.
மார்க்ஸ் - அறிவு; ஏங்கல்ஸ் - அனுபவம்.
ஒருவர் எரிமலை; மற்றவர் பனிமலை.
மார்க்ஸை யாரும் சுலபத்தில் நெருங்க முடியாது. அசட்டுதனத்-துடன் யாரேனும் அருகில் போனால் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அவர்களை அப்பால் தூக்கி வீசிவிடும். அதேசமயம் ஏங்கல்ஸின் அன்பு எத்தனை கொடியவரையும் அருகில் வரச்செய்து அரவணைத்-துக்கொள்ளும். மார்க்ஸ், சிந்தனையின் தொடர்ச்சியில் நெடுந் தூரம் நீந்தக்கூடி-யவர். ஏங்கல்ஸ் சட்டென முடிவெடுத்துச் செயலில் இறங்கக்கூடியவர்.
இந்த பாசிட்டிவ்வும் நெகட்டிவ்வும் இணைந்த தருணத்தில்தான் அதுவரை இருள-டர்ந்து கிடந்த உலகத் தொழி-லாளர்--களின் வாழ்வில் மார்க்ஸியம் எனும் பிரமாண்ட மின் சூரியன் உதய-மாகியது.
அந்த நட்புதான் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் முதற்கொண்டு இன்று உலகின் கடைக்-கோடி தொழிலாளிக்கும் தொழிலாளர் நல நிதி, மருத்துவ வசதி, போனஸ் போன்றவற்றைப் பெற்றுத் தந்திருக்கிறது.
அந்த நட்பின் வரலாறு எழுதப்-படுவதற்கு முந்தைய ஏங்கல்ஸின் கதை வீடற்று அலையும் ஒரு பறவையைப் போன்றது. அவரிடம் எண்ணற்ற புதிய கருத்துக்கள் இருந்தன. ஆனால், அவற்றைச் சுமந்துகொண்டு தனிய-ராகவே ஜெர்மன், பிரான்ஸ், லண்டன் என அலைந்துகொண்டு இருந்தார்.
சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் மிக்கவரான ஏங்கல்ஸ், மார்க்ஸ் பிறந்த அதே ரைன் மாகாணத்-தின் பார்மன் நகரத்தில், அவருக்கு இரண்டு வருடங்கள் கழித்து, 1820-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதியன்று பிறந்தார். ஆச்சர்யம் என்னவென்-றால், அவரின் தந்தை லண்டனில் நெசவுத் தொழிற் சாலை ஒன்றில் பங்கு-தாரராக இருக்கும் பெரும் முதலாளி. கவிதை எழுதும் மனது காரணமாகவோ, அல்லது தொழி-லாளர்--களின் துயரங்களையும் அவர்-களுக்கு இழைக்கப்படும் அநீதி-களையும் அருகிலிருந்து பார்த்ததன் காரண-மாகவோ ஏங்கல்ஸ§க்குள் புதிய சமூக மாற்றங்களுக்கான நெருப்பு கொழுந்து-விட்டு எரியத் துவங்கியது.இக் கால-கட்டங்களில், பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு ஒரு நாள் வந்த போது, அங்கே அனைவரும் மார்க்ஸ் பற்றியும் அவரது சிந்தனை வேகத்தைப் பற்றியும் பரபரப்பாகப் பேசிக்கொண்டு இருந்ததைக் கேள்விப்பட்டார். ‘யார் இந்த கார்ல் மார்க்ஸ்? அவன் என்ன நம்மைவிட உண்மையாகவும் உயர் வாகவும் சிந்திக்கக்கூடியவனா? அவனைச் சந்திக்க வேண்-டுமே’ என இயல்பாக அவருக்குள் ஓர் எதிர்பார்ப்பு தோன்றியிருக்கிறது.
கொலோன் என்னும் இடத்-தில், ஒரு காபிக் கடையில் எதிர்-பாராமல் இருவரும் சந்திக்க நேர்ந்தது. ஆனால், சூழலின் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் தவறாகப் புரிந்து கொண்டு விலகிச் சென்றனர். அதன் பிறகுதான், நாம் ஏற்கெனவே குறிப்-பிட்டி-ருந்தபடி ரைன்லாந்து கெஜட் பத்திரிகையில் மார்க்ஸ் ஆசிரியராக இருந்தபோது, அதற்கு வந்த ஏங்கல்ஸின் கட்டுரைகளைப் படித்து வியந்திருக்கி-றார். இந்தச் சூழலில், ஏங்கல்ஸின் அப்பா, மகனது கம்யூனிச நடவடிக்கை-களின் காரணமாக கடும் கோபத்துக்கு ஆளாகி, ஒழுங்காகத் தொழிலைக் கவனிக்-கும்படி மகனைக் கண்டிக்க, வேறு வழியில்லாமல் வேதனையோடு லண்டன் தொழிற்சாலைக்குச் சென்றார் ஏங்கல்ஸ். தன் கொள்கை-களுக்கேற்ப தன்னால் சுதந்-திர-மாகச் செயல்பட முடிய-வில்லையே என்னும் வருத்தம் ஏங்கல்ஸ§க்கு அதிகரித்தது.
இக் காலகட்டத்தில்தான் மார்க்ஸ் புது மனைவி-யுடன் புறப்பட்டு பாரீ ஸ§க்குப் பிழைப்புத் தேடி வந்திருந்தார்.
எண் 38, வன்னியே எனும் வீதியில் வசித்து வந்த அறிவுச்-சிங்கத்திடம், ரூஜ் என்கிற நண்பன், தான் ஒரு பத்தி-ரிகை நடத்தப்போவதாகச் சொல்லி-யிருந்தான். .அதன்படி, அவன் மார்க்ஸை ஆசிரியராகக் கொண்டு ‘ஜெர்மன் பிரெஞ்சு மலர்’ என்ற பத்திரிகையைக் கொண்டு வந்தான். ஆனால், மார்க்ஸ§க்கு உரிய சம்பளம் தராமல் ஏமாற்றியதோடு, ‘வேண்டு-மானால் நீயே இந்தப் பத்திரிகைகளைக் கொண்டு போய் விற்றுச் சம்பாதித்துக் கொள்’ என்று சொல்லிவிட் டான். மார்க்ஸ§க்கு வேதனை தாங்க முடியவில்லை. கர்ப்பிணி யாக இருந்த தன் மனைவியிடம் ‘எப்படியும் பணம் வந்துவிடும். நாம் சந்தோஷ-மாக இருப்போம்’ என வாக்களித்துவிட்டு வந்தி-ருந்-தார். அந்த ஆத்திரத்தில் ரூஜை கடுமை-யாகத் திட்டிவிட்டு வீட்டுக்கு வந்தார்.
1944, மே 1. எண் 38, வன்னியே வீட்டில் ஒரு பெண் குழந்தை-யின் சத்தம் கேட்டது. குழந்தையின் மழலையில் மார்க்ஸ§ம் ஜென்னியும், சூழ்ந்திருந்த வறு-மையை மறந்து சந்தோஷத்-துடன் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தனர். இதனிடையில், ‘ஜெர்மன் பிரெஞ்சு மலர்’ பத்திரிகை, மார்க்ஸ் நினைத்ததைவிட ஆட்சி-யாளர்களி டையே கடும் கோபத்-தையும் கொந்த-ளிப்பையும் உருவாக்கி-யிருந்தது. அதில் ஏங்கல்ஸ் எழுதியிருந்த பொரு ளாதாரக் கட்டுரை மார்க்ஸ§க்கு அதிகம் பிடித்-திருந்தது. பின்னா-ளில் மார்க்ஸ் இக்கட்டுரை குறித்துப் பல இடங்களில் மேற்-கோள் -காட்டி எழுதி இருக்கிறார்.
இந்தச் சூழலில்தான், ஏங்கல்ஸ் லண்டனி-லிருந்து தனது சொந்த ஊரான பார்மனுக்குப் போகும் வழியில், சட்டென யோசனை வந்த வராக பாரீஸில் இறங்கியிருக்கிறார். தனது கட்டுரைக்கு எந்த மாதிரியான எதிர்விளைவு என்பதைத் தெரிந்துகொள்வ தற்கும், தன்னைப் போலல்லாமல் கொள்கைக் காக வாழ்க்கை-யையே அடகு வைத்து வாழும் மார்க்ஸை சந்திப்-பதற்காகவுமே தனது பயணத் திலிருந்து பாதியில் இறங்கியிருக்கிறார்.
அதுநாள் வரை எங்கெங்கோ அலைந்த அந்த இரு துருவங்களும் நேர்க்கோட்டில் சந்திப்பதன் மூலம் உலக வரலாறு தன்னைத் திருத்திக்கொள்ளப் -போவ-தையும், அதில் தனக்கும் முக்கிய பங்கிருப்பதையும் அறியாத 1944-ன் ஆகஸ்ட் மாத இறுதி நாளன்றில், மார்க்ஸ§ம் ஏங்கல்ஸ§ம் கைகுலுக்கிக்கொண் டனர். முந்தைய சந்திப்பைப் போலில்லா-மல் இம்முறை ஒருவரை ஒருவர் முழுமை--யாக அறிந்திருந்தனர்.
மார்க்ஸின் எழுச்சி மிக்க அறிவும் ஆய்வும் அதற்கான தியாகங்களும் ஏங்கல்ஸைக் கட்டிப்போட்டன. பொருளா-தாரத்தின் மீதான ஏங்கல்ஸின் மதிநுட்பம் மார்க்ஸை வசீகரித்-திருந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் பாரீஸில் தங்கியிருந்து மார்க்ஸ§டன் விவாதித்த ஏங்கல்ஸின் கண் முன்னே சுரண்டலற்ற புதிய உலகம் விரியத் துவங்கியது.அவரின் காதுகளில் தொழிலாளர்களின் விடுதலைப் பாடல்-கள் ரீங்கரித்தன. அதுவரை சிந்தனை தளத்தில் மட்டுமே இயங்கி வந்த மார்க்ஸை ஏங்கல்ஸின் வார்த்தைகள், செயலில் உடனடியாக இறங்-கும்-படி கட்டளை இட்டன.
அக் காலகட்டத்தில், பிரான்ஸில் இரண்டு பிரச்னைகள் இருந்தன. முதலா-வது போலி கம்யூனிஸ்ட்டு-களுடையது. இவர்களில் பலர் புரட்சி, புரட்சி என வாய் கிழியப் பேசிவிட்டு அழுக்கு உடை-களுடன் வரும் தொழிலாளி-களைப் பார்த்து முகம் சுளித்து ஒதுங்கிக்-கொள்ப-வர்கள். மார்க்ஸ் இவர்-களைத் தனது கட்டுரைகளின் மூலமாகவும், கூட்டங்-களிலும் ஓட ஓட விரட்டியடித்தார்.
இன்னொரு பிரச்னை தொழி-லாளர்-களுடையது. அக் கால-கட்டத்-தில் பிரான்ஸில் பிரெஞ்சு தொழி-லாளர்-களுடன் ஜெர்மனியைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஒன்றாகப் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து-கொண்-டால் எங்கே அது தங்க-ளுக்குப் பெரும் ஆபத்தாகி-விடுமோ என்று பயந்த முதலாளி-கள், இரு பிரிவினருக்குள்ளும் கலகம் ஏற்படுத்தி, மோதவிட்டுக் குளிர்காய்ந் தனர். அது மட்டு-மின்றி தொழிலாளர்களிடம் அதிக உழைப்பைச் சுரண்டி, குறைந்த ஊதியம் தந்தனர்.
‘உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனை-வரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும்’ என மார்க்ஸ் ஆணித்தரமாகக் கூறிய-தோடு நில்லாமல், அவர்-களை ஒன்று சேர்க்கும் முயற்சி-யிலும் இறங்கினார். இது தொடர்பாக தனது எண்ணங்-களை வெளி-யிட அவருக்கு ஒரு பத்திரிகை தேவையாக இருந்-தது. நண்பர்-கள் ஒன்றிணைந்து ஒரு இதழ் துவக்கினர். அதன் பெயர் ‘முன்னேற்றம்’.
புதிதாக உதித்த முன்னேற்றம் பத்திரிகையில் மார்க்ஸின் கட்டுரைகள் வெளியாகத் துவங்கின. அதுவரை அடக்கி-வைத்திருந்த கோபங்கள் மார்க்-ஸிடமிருந்து ஏவுகணை வார்த்தைகளாக சீறிப்பாய்ந்து ஆட்சியாளர்களைத் துவம்சம் செய்தன. அவரது கட்டுரைகள் மக்களையும் தொழி-லாளர்களையும் புரட்சிப் பாதைக்கு வரச்சொல்லி அறைகூவல் விடுத்-தன. ஜெர்மானிய மன்னர் நான்காம் ப்ரெட்ரிக்கை ‘பிற்போக்கின் மேலான பிரதிநிதி’ என பிடறியில் அடித்தார் மார்க்ஸ். மக்க-ளிடையே செல்வாக்கு எழுந்தது. தொழிலாளர்கள் விடி-வெள்ளி-யாக மார்க்ஸைக் கொண்டா-டி மகிழ்ந்தனர்.
ஜெர்மன் அரசு துள்ளிக் குதித்தது.பிரெஞ்சு அரசாங்கத்திடம் மார்க்ஸை யும் கூட்டாளிகளையும் நாடு-கடத்தும்படி வேண்டியது.
1845 ஜனவரி 11-ம் தேதி, பிரான்ஸில் ‘முன்னேற்றம்’ தடை செய்யப்பட்டது.
மற்றவர்கள் மன்னிக்கப்பட, மார்க்ஸ் மட்டும் இலக்கானார். காவலர்களால் சுற்றிவளைக்கப்பட்ட மார்க்ஸ், அடுத்த 24 மணி நேரத்துக்-குள் -பிரான்ஸை விட்டு வெளி-யேறும்படி எச்சரிக்கப்பட்டார். வீட்டுக்குச் சென்று மனைவியிடம் சொல்லக்கூட அனுமதி மறுக்கப் பட்டது.
ஆனால், ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் அப்போது அவருக்குத் தரப்-பட்டது. ஒரே ஒரு வார்த்தை... அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லி-விட்டால் போதும், எப்-போதும்போல் அவர் பிரான்ஸிலேயே அமைதி-யாக குடும்பம் நடத்தலாம். எந்தத் தடையும் இல்லை.
அவர்கள் கேட்ட அந்த வார்த்தை - மன்னிப்பு!
--------------------
From Vikatan.com
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment